பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மேற்கு வங்கத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் தொடக்கம்!

மேற்கு வங்கத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் தொடங்கப்பட்டது குறித்து...

Free bus

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் தொடக்கம். - படம் - பிடிஐ

Published On :

மேற்கு வங்கத்தில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தை அந்த மாநில அரசு திங்கள்கிழமை (ஜூன் 1) தொடங்கியுள்ளது.

மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ள 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் வெற்றிபெற்று, மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது. சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்றது முதல் சில முக்கியத் திட்டங்களை அந்த மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

பாஜக தனது சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணத்தை அரசு இன்று முதல் தொடங்கியுள்ளது என்று அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைவதாகவும் இருப்பினும், பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேற்கு வங்க போக்குவரத்து கழகம், தெற்கு வங்க மாநில போக்குவரத்து கழகம் மற்றும் வடக்கு வங்க மாநில போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் அனைத்து பேருந்துகளிலும் இன்று (ஜூன் 1) முதல் பெண்களுக்கு அரசாங்கம் இலவசப் பயணத்தை அரசு அறிவித்துள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாத வகையில், புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் ஸ்மார்ட் அட்டைகளையும் மகளிருக்கு அரசு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The West Bengal government launched a free bus travel scheme for women on state-run buses on Monday (June 1).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.