பழனியில் அறுமுகவேலன் என்ற தலைப்பில் முருகப் பெருமானின் பக்திப்பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பழனி- திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் இதன் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கந்தவிலாஸ் பாஸ்கரன் தலைமை வகித்தார். நெய்க்காரபட்டி அரிமா மாவட்டத் தலைவர் சுப்புராஜ், சூர்யா நிறுவன இயக்குநர் ஈஸ்வரசாமி, வழக்குரைஞர் உதயக்குமார், அமமுக மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலர் ரவீந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். அறுமுக வேலன் பாடல்கள் திரையிட்டு காட்டப்பட்டதைத் தொடர்ந்து சிடிக்களை கந்தவிலாஸ் பாஸ்கரன் வெளியிட்டார்.
சவரிக்காடு உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், முருகன் படப்பாடலை தயாரித்தவருமான இயக்குநர் கிருஷ்ணகுமார் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள், திரைத்துறையினர் மற்றும் அன்னை தெரசா பிலிம்ஸ் குழுவினர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

