தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள சின்னமனூரில் மின்னல் பாய்ந்ததில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சின்னமனூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 1) மாலை பலத்த சூறாவளிக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர் மீது மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஓடைப்பட்டி காவல்துறையினர், பலியான விவசாயியின் உடலை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் சின்னமனூர் அருகே கண்ணியம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் கார்த்தீஸ்வரன் (31), தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் பாய்ந்து பலியானது தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
A farmer died on the spot after being struck by lightning in Chinnamanur, located within the Uthamapalayam Town Panchayat in Theni District.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூரில் மின்னல் பாயந்த்து காளியம்மன் கோயில் கலசம் சேதம்

ஜார்க்கண்டில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

உத்தமபாளையம்: கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி

மின்னல் பாய்ந்துதொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு


