கன்னிவாடி அருகே பால் வியாபாரி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்துள்ள வீரப்புடையான்பட்டியைச் சேர்ந்த பால் வியாபாரி முத்தையா (45). இவர், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாராம்.
உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இது குறித்து அவருடைய மகன் அய்யப்பன் கன்னிவாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முத்தையா தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








