திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஆக. 18) நடைபெறுகிறது.
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஆக. 18) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஆக.18)  காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கோவிலூர் (திண்டுக்கல் கிழக்கு), முத்தனம்பட்டி (திண்டுக்கல் மேற்கு), வேளாங்கண்ணிபுரம் (ஆத்தூர்), எத்திலோடு (நிலக்கோட்டை), குடகிப்பட்டி (நத்தம்), இடையக்கோட்டை(ஒட்டன்சத்திரம்),   கோம்பைபட்டி (பழனி), கும்பரையூர் (கொடைக்கானல்), வேல்வார்கோட்டை (வேடசந்தூர்) ஆகிய கிராமங்களில் நடைபெறும் கூட்டங்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் பங்கேற்று,  பொது விநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளை மனுவாக அளித்து தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.