தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

திண்டுக்கல் அருகே லாரி மீது  பைக் மோதி இளைஞர் சாவு

திண்டுக்கல் அருகே பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

திண்டுக்கல் அருகே பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தார்.
   திண்டுக்கல் மாவட்டம், இடையக்கோட்டையை அடுத்துள்ள ஜவ்வாதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீ.கிருஷ்ணமூர்த்தி (35). இவர், தனது உறவினருடன் திண்டுக்கல்லிலிருந்து தாடிக்கொம்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில், அழகுசமுத்திரப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, சாலையின் நடுவில் உள்ள பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரியின் பின்னால், மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.