மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

தந்தம் கடத்திய வழக்கு: கேரள சிறையிலிருந்த 2 பேரை காவலில் எடுத்து தமிழக வனத்துறை விசாரணை

தேனி அருகே வனப்பகுதியில் மின்சாரம் பாய்ந்து இறந்த யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியதாக கைது

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தேனி அருகே வனப்பகுதியில் மின்சாரம் பாய்ந்து இறந்த யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்டு கேரள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இருவரை தமிழக வனத்துறையினர் புதன்கிழமை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் சுருளியாறு மின் உற்பத்தி நிலையம் அருகே கடந்த 11 ஆம் தேதி ஆண் யானை மின்சாரம் பாய்ந்து இறந்தது. அப்பகுதிக்குச் சென்று வனத்துறையினர் யானையை பார்வையிட்டதில், அதன் தந்தம் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த தந்தத்தை குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கங்கா, பிரபு ஆகியோர் குமுளியில் விற்பனை செய்ய முயன்ற போது, தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தினர் அவர்களை கைது செய்து பீர்மேடு சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் யானை தந்தத்தை வெட்டி எடுத்ததாக கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் இரண்டு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, தமிழகத்தில் விசாரிக்க அனுமதிக்குமாறு கேரள மாநிலம் பீர்மேடு நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். 
அதன்பேரில் பெரியாறு புலிகள் காப்பக வனத்துறையினர் புதன்கிழமை உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் கங்கா, பிரபு இருவரையும் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்கள் 2 நாள் காவலில் எடுக்கப்பட்டு மாவட்ட வன அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் மாவட்ட வனக்காப்பாளர் கலாநிதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.