முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

பழனி, கொடைக்கானல் மற்றும் ஆண்டிபட்டியில் எம்ஜிஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

Updated On :25 டிசம்பர் 2018, 7:27 am IST

பழனி, கொடைக்கானல் மற்றும் ஆண்டிபட்டியில் எம்ஜிஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
      இதை முன்னிட்டு, பழனியில்  பல்வேறு இடங்களிலும் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பெரியப்பா நகரில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக நகர கழகம் சார்பில் மாலைகள் அணிவிக்கப்பட்டது.
   நிகழ்ச்சிக்கு, நகரச் செயலர் முருகானந்தம் தலைமை வகித்தார். ஆவின் தலைவர் செல்லச்சாமி, துணை செயலர் முருகன், செல்வக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
     அதன்பின்னர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நகரம் மற்றும் ஒன்றிய கழகம் சார்பில், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், நகரச் செயலர் கணேசன், ஒன்றியச் செயலர் ஆறுமுகம், துணைச் செயலர் மாலதி பெரியராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றிய அதிமுக சார்பில், வைகை அணை சாலைப் பிரிவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலர் ஏ. லோகிராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலர் அமரேசன் முன்னிலை வகித்தார்.    இதில், அதிமுக தொண்டர்கள் பலர் மொட்டையடித்துக் கொண்டனர். அவர்களுக்கு வேட்டி, சட்டைகளை லோகிராஜன் வழங்கினார்.    
   பின்னர், டி.ராஜகோபாலன்பட்டி விலக்கு பகுதியில் செயல்படும் ஆதவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கி, நிதியுதவியும் செய்தனர். இதில், நகரச் செயலர் முத்துவெங்கடராமன், மாவட்டப் பிரதிநிதி கவிராஜன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கொடைக்கானல்: அதிமுக சார்பில், மூஞ்சிக்கல், அண்ணா சாலை ஆகிய இடங்களில் நகரச் செயலர் ஸ்ரீதர் தலைமையில், அக்கட்சியினர் எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல், கொடைக்கானல் அமமுக சார்பில் மூஞ்சிக்கல், அண்ணா சாலைப் பகுதியில் நகரச் செயலர் கோவிந்தன் தலைமையில், எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியில், மேல்மலை ஒன்றியச் செயலர் பொன்னுத்துரை மற்றும் அமமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.