முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஒட்டன்சத்திரம் பள்ளியில் இளம் தொழிலதிபர்கள் முகாம்

ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம். ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் நடத்திய

Updated On :25 டிசம்பர் 2018, 7:26 am IST

ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம். ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் நடத்திய இளம் தொழிலதிபர்களுக்கான சிறப்பு முகாம் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   முகாமை பள்ளித் தாளாளர் ஆர்.வி.கே. ரத்தினம் மற்றும் செயலர் சபரி ஹிதர் ஆகியோர் தொடக்கி வைத்தனர். முகாமில் இயற்கை உணவு வகைகள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடைகளை மாணவ, மாணவிகள் அமைத்து இருந்தனர். அதே போல திகில் விளையாட்டு அரங்கம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை ஏராளமான பொதுமக்களும், பெற்றோர்களும் பார்வையிட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி முதன்மை அலுவலர் தினேஷ், பள்ளி முதன்மை முதல்வர் கணேசமூர்த்தி, பள்ளி முதல்வர் பவித் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.