பழனியில் மளிகை கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
பழனி திருநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். பழனி காந்தி சந்தையில் மளிகைக் கடை வைத்துள்ளார். இவர் சனிக்கிழமை தனது மனைவியுடன் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து, 3 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி, ரூ.30ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பழனி நகர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். பழனி பகுதியில் சமீப காலமாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் போலீஸார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!

முடிவுக்கு வந்தது தந்தை-மகன் மோதல்! அன்புமணியை ஆரத்தழுவி வரவேற்ற ராமதாஸ்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


