தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

கோவையில் நிலக்கோட்டை காவலர் தற்கொலை

கோவையை அடுத்த கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் பணியாற்றி வந்த காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

Updated On :24 ஜூலை 2018, 1:07 am IST

கோவையை அடுத்த கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் பணியாற்றி வந்த காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 
 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், விளாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆர்.அமர்நாத் (25) . பிளஸ் 2 வரை படித்துள்ள இவர் 2016ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து, 2017ஆம் ஆண்டு முதல் கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 4ஆம் அணியில் காவலராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அமர்நாத் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரையில் இருந்துள்ளார். அதன் பிறகு அவரைக் காணவில்லை. இதனிடையே காவல் படை வளாகத்தில் உள்ள மரத்தில் திங்கள்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 
 இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும், அமர்நாத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது செல்லிடப்பேசி அழைப்புகளைக் கொண்டு  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.