தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

பணத்துக்காக கடத்தப்பட்டதாக லாரி தரகர் போலீஸில் புகார்

கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தன்னை சிலர் கடத்திச்சென்றதாக ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த லாரி தரகர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தன்னை சிலர் கடத்திச்சென்றதாக ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த லாரி தரகர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
     ஒட்டன்சத்திரம் சத்தியா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (45). லாரி தரகரான  இவர் தாராபுரம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த செந்திலிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடனைத் திருப்பித் தராத நிலையில், அவரை செந்தில் உள்ளிட்ட சிலர் செவ்வாய்க்கிழமை இரவில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து கடத்தி தாராபுரம் பகுதியில் இறக்கிவிட்டுள்ளனர். 
அங்கிருந்து தப்பிவந்த தங்கராஜ் புதன்கிழமை ஒட்டன்சத்திரம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.