திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகள் நலன் கருதி உரங்களின் விலை உயர்த்தப்படாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது என இணைப் பதிவாளர் எஸ்.குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உர உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்கள் நாப்தா மற்றும் பாஸ்பாரிக் அமிலம் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, உரங்களின் விற்பனை விலையை அனைத்து நிறுவனங்களும் கடந்த செப்.1 ஆம் தேதி முதல் உயர்த்தியுள்ளன. ஆனாலும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (டான்பெட்) மூலமாக பழைய விலையிலேயே உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிச் சந்தையில் ரூ.1365-க்கு விற்பனை செய்யப்படும் டிஏபி மூட்டை, கூட்டுறவு சங்கத்தில் ரூ.1290-க்கும், ரூ.1015-க்கு விற்பனை செய்யப்படும் 20:20:0:13 காம்பளக்ஸ் உரம் ரூ.950-க்கும், ரூ.1580-க்கு விற்பனை செய்யப்படும் 10:26:26 காம்பளக்ஸ் உரம் ரூ.1160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் பாமணி 17:17:17 உரம் ரூ.970-க்கும், கலப்பு உரம் எண் 2 ரூ.482-க்கும், கலப்பு உரம் எண் 3 ரூ.605-க்கும், கலப்பு உரம் எண் 10 ரூ.469-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பினை திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


