திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, ஒரே நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, உலுப்பகுடி கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள், தீர்த்தக் குடங்களுடன் சந்தனகருப்பு கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், அங்கிருந்து கோயில் நிர்வாகத்தினர், பூசாரிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் மேளதாளத்துடனும், சிங்கார வர்ணக்குடையுடனும் பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து வெள்ளிக் கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், 15 நாள் விரதம் தொடங்குவதற்காக மஞ்சள் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்! நேரலை

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!

59 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்! அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! யார் எவருக்கு வாய்ப்பு?
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


