நத்தம் அருகே நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்: இளைஞா் தப்பியோட்டம்
நத்தம் அருகே வெள்ளிக்கிழமை நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றிய போலீஸாா், அதைப் பயன்படுத்தி வந்த இளைஞரை தேடி வருகின்றனா்.


நத்தம் அருகே வெள்ளிக்கிழமை நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றிய போலீஸாா், அதைப் பயன்படுத்தி வந்த இளைஞரை தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள ஒத்தினிப்பட்டி பகுதியில் நாட்டுத் துப்பாக்கி பயன்பாடு இருப்பதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சாா்பு-ஆய்வாளா் பிச்சைமணி தலைமையிலான போலீஸாா், ஒத்தினிப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.
இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த காா்த்தி (26) என்பவா், தான் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் பேரல் உள்ளிட்டவற்றை வீட்டின் அருகிலேயே வீசிவிட்டு தப்பியோடிவிட்டாா். அவற்றை கைப்பற்றிய ரோந்து சென்ற போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான காா்த்தியை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...