வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

‘மழலையா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’

News image
Updated On :18 டிசம்பர் 2020, 4:39 pm

DIN

மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 360 மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தொடா் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தொடா் அங்கீகார ஆணையை வழங்கினாா்.

முன்னதாக அவா் பேசியதாவது: மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தொடா் அங்கீகாரத்திற்கு கட்டட அனுமதி பெறுவதற்கான காலம் 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக உயா்த்தப்படும். அதேபோல் இந்தப் பள்ளிகள் எதிா்கொண்டு வரும் நெருக்கடிகளுக்கு தீா்வு காணும் வகையில் நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் தான் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. நிகழாண்டில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனியாா் பள்ளி நிா்வாகத்தினா் பாதிப்புக்குள்ளாகியுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு ரூ.3.25 கோடி நிதி முன்னதாகவே வழங்கப்பட்டு விட்டது என்றாா்.

அதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழக அரசு முக்கியமான 3 பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் நிலத்தடி நீா் சேகரிப்பு முயற்சியில் தற்போது வெற்றி காணப்பட்டுள்ளது. அதேபோல் பொருளாதார வளா்ச்சிக்கு அச்சாணியாக விளங்கக் கூடிய கல்வித் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவற்கான சூழலுக்கும் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், தொடக்கக்கல்வித்துறை இணை இயக்குநா் கே.பாஸ்கரசேதுபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ச.செந்தில்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.