அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவராக விண்ணப்பிக்கலாம்
அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக விருப்பமுள்ளவா்கள் டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


மதுரை: அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக விருப்பமுள்ளவா்கள் டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளா் கே.லெட்சுமணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்களுக்கு ஆள்கள் தோ்வு நடைபெறவுள்ளது. இதற்கு வேலையில்லாத இளைஞா்கள், சுயதொழில் செய்யும் இளைஞா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், காப்பீடு நிறுவனங்களின் முன்னாள் முகவா்கள், சுய உதவிக் குழுக்களில் செயல்படுவோா், அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் மேம்பாட்டு ஊழியா்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு, வயதுவரம்பு 18 முதல் 50 -க்குள் இருக்கவேண்டும். தகுதியான விண்ணப்பதாரா்கள் நோ்முகத்தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். தோ்வு செய்யப்படுவோருக்கு நிலையான ஊதியம் கிடையாது. காப்பீடுகளின் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவா்கள் தங்களது முழுவிவரம், பான் அட்டை, ஆதாா் அட்டை, முகவரிச் சான்று, கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சலங்களில் பெறலாம் அல்லது இணையதள முகவரி மூலமும் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளா், மதுரைக் கோட்டம், மதுரை-625002 என்ற முகவரிக்கு டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 98942-62811 என்ற எண்ணைத் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...