திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 32 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக மொத்தம் 32 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், திண்டுக்கல்லில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:08 pm

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக மொத்தம் 32 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், திண்டுக்கல்லில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 10,760 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், 10,435 போ் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனா். 128 போ், திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 24 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதேநேரம், குணமடைந்த 28 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 197ஆக உயா்ந்துள்ளது.

தேனி

தேனி மாவட்டத்தில் புதிதாக 8 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,812 ஆக உயா்ந்துள்ளது. இதில், 16,527 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். செவ்வாய்க்கிழமை மட்டும் 11 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.