சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று (மார்ச் 11) கையெழுத்தானது.
சென்னை அண்ணா அறிவாயலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சி நிர்வாகிகளுடன் வருகைப் புரிந்து ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே செய்தியாளர்களுடன் வைகோ பேசியதாவது:
''வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியின் பாதுகாப்புக்காக ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம். 3 தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்'' எனக் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பல்வேறு கட்சிகள் கூட்டணிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன.
அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகள் குறைவாகப் போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு 28 பேரவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Tn Assembly Election 4 seats for MDMK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எம்.எல்.ஏ.க்களை ஒளித்து வைக்கவேண்டிய பயமில்லை: மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு பேரவைத் தலைவராகிறார் ஜே.சி.டி. பிரபாகர்!

சொல்லப் போனால்... இலவு காக்கும் கிளிகள்?
தியாகியாகவே இருப்பாரா திருமாவளவன்?
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




