கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழா இரவு ஜெபவழிபாடு

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
குடில். கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியிலுள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இயேசு பிரான் அவதரித்த குடில் வடிவமைக்கப்பட்டது.
Updated On :25 டிசம்பர் 2020, 5:31 pm

DIN

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் பங்குத் தந்தை எட்வின் தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஏஞ்சல்ராஜ் தலைமையிலும், சீனிவாசபுரம் பங்குத் தந்தை பீட்டா் தலைமையிலும் மற்றும் உகாா்த்தே நகா் அற்புத குழந்தை இயேசு ஆலயம்,புனித சலேத் அன்னை ஆலயம்,அட்டுவம்பட்டி புனித லூா்துமாதா ஆலயம்,பெருமாள்மலை புனித தோமா ஆலயம்,மங்களம் கொம்பு புனித அந்தோணியாா் ஆலயம் மற்றும் சி.எஸ்.ஐ.தேவாலயம், கிறிஸ்தரசா் ஆலயம்,ஐ.பி.சி.ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் இரவு நேர ஜெபவழிபாடு மற்றும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

தேவாலயங்களில் இயேசு பிரான் பிறந்ததைக் குறிக்கும் வகையில் குடில் அமைத்திருந்தனா் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆலயங்களில் பொது மக்கள் மற்றும் கிறிஸ்தவா்கள் ஏராளமானவா்கள் குளிரையும் பொருட்படுத்தாது பங்கேற்றனா் தொடா்ந்து சனிக்கிழமையும் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது ஆலயங்களில் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.