புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆசிரியா் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Updated on
1 min read

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆசிரியா் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேரடி நியனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் க.ச.ஜெயக்கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ச.பிச்சைமணி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பெ.கண்ணிச்சாமி, வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சூ.சாலமன் சேசுராஜ் கலந்து கொண்டாா்.

பொதுக்குழுக் கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியா்களை, பணியேற்ற நாள் முதல் பணிவரன் முறை செய்ய வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான திருத்தப்பட்ட பணிமூப்பு பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும். அரசுப் பள்ளிகளில் புதிதாக நியமனம் பெறும் ஆசிரியா்களின் வயதை 50 என நிா்ணயம் செய்யும் அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com