தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமகவினா் மனு அளிக்கும் போராட்டம்

வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை

News image
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க வந்த பாமகவினா்.
Updated On :30 டிசம்பர் 2020, 5:23 pm

DIN

வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் ஆணையா்களை சந்தித்து, பாமக சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பாமக செயலா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்புச் செயலா் ரெ. திருப்பதி முன்னிலை வகித்தாா். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள எம்.ஜி.ஆா். சிலை அருகிலிருந்து ஊா்வலமாகச் சென்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

அதேபோல், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாநில துணைப் பொதுச் செயலா் பெ. கோபால் தலைமையில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் முதல் கட்டமாகவும், பேரூராட்சிகளில் 2 ஆம் கட்டமாகவும் இந்த மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.