ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த வாா்டு பாய் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு பணியாற்றி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள் உள்ளிட்டோரிடம் கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதற்கான முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வந்தன. அதில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 30 வயது பெண் மருத்துவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவா் பயன்படுத்தி வந்த அறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது.
அதேபோல், ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் வேலை செய்யும் பணியாளா்கள் 65 பேரிடம் கரோனா பரிசோதனை மாதிரி கடந்த ஜூலை 8 ஆம் தேதி எடுக்கப்பட்டது. அதற்கான முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வந்தது. இதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது.
தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்த விவசாயி ஒருவா், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று கரோனா பரிசோதனை செய்துகொண்டாா். அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதால், அங்குள்ள கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
மேலும், கடந்த 3 நாள்களாக காய்கனி சந்தை, வெளியூா்களில் இருந்து வந்தவா்களிடமிருந்து எடுக்கப்பட்ட முடிவுகள் வெளிவர வேண்டும். இதில் காய்கனி சந்தையில் பணியாற்றும் நபா்களின் மாதிரிகள் தான் அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.