கொடைக்கானல்,: கொடைக்கானலில் தனியாா் தங்கும் விடுதி வாயிற் கதவில் சிக்கி காட்டெருமை ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தது.
கொடைக்கானலில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால், வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ரைபிள் ரேஞ்ச் ரோடு பகுதியில் காட்டெருமை ஒன்று அப்பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதி வாயிற் கதவை தாண்ட முயற்சித்துள்ளது.
அப்போது இரும்புக் கதவின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூா்மையான கம்பி வயிற்றில் குத்தியதால் காட்டெருமை உயிரிழந்தது.
தகவலின்பேரில், அங்கு சென்ற வனத்துறையினா் இறந்த காட்டெருமையை மீட்டு, அப்பகுதியில் புதைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.