தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கன்னிவாடி வனப்பகுதியில் 10 ஆயிரம் விதைப் பந்துகள் வீச்சு

கன்னிவாடி வனப் பகுதியில் 10 ஆயிரம் விதைப் பந்துகள் தூவப்பட்டன. 

News image
கன்னிவாடி வனப்பகுதியில் 10 ஆயிரம் விதைப் பந்துகள் வீச்சு.
Updated On :27 ஜனவரி 2024, 5:49 pm

DIN

கன்னிவாடி வனப் பகுதியில் 10 ஆயிரம் விதைப் பந்துகள் தூவப்பட்டன. 

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகம் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேரில் அமைந்துள்ளது. கன்னிவாடி, சித்தையன்கோட்டை, பெரியூர், செங்கட்டாம்பட்டி, அரசமரத்துப்பட்டி, கோட்டைவெளி என 6 பகுதிகளாக இந்த வனப் பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் கன்னிவாடி காப்புக்காடு பகுதியில் 10 ஆயிரம் விதைப் பந்துகள் தூவும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆல், அரசு, அத்தி, குடை வேல், கல்இச்சி உள்ளிட்ட விதைகளுடன் கூடிய விதைப் பந்துகளை தூவும் பணி வனச்சரகர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. சில இடங்களில் விதைப் பந்துகளை எறிந்தும், ஒருசில இடங்களில் குழி தோண்டி புதைக்கும் பணிகளும் நடைபெற்றன. இதுதொடர்பாக வனச்சரகர் சக்திவேல் கூறுகையில், கன்னிவாடி காப்புக்காடு பகுதிகலான நாயோடை, மொட்டைக் கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் வனத்தின் அடர்த்தி குறைவாக உள்ளது. 

அதுபோன்ற பகுதிகளை தேர்வு செய்து விதைப் பந்துகள் தூவப்படுகின்றன. தற்போது மழை பெய்து வருவதால், தூவப்படும் விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். விதைப் பந்து தூவும் பணியில், கன்னிவாடி சரகத்தைச் சேர்ந்த வனவர்கள், வனக் காப்பாளர்கள், வனக் காவலர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.