பழனி காய்கனி சந்தையில் ஏல நேரம் திடீா் குறைப்பு: விவசாயிகள் அவதி
பழனி நகராட்சி காய்கனி சந்தையில் திடீரென ஏல நேரத்தை குறைத்துள்ளதால் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.


பழனி நகராட்சி காய்கனி சந்தையில் திடீரென ஏல நேரத்தை குறைத்துள்ளதால் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.
பழனி பெரியப்பா நகரில் நகராட்சி மொத்த காய்கனி சந்தை இயங்கி வருகிறது. இங்கு பழனியைச் சுற்றியுள்ள ஆயக்குடி, நெய்க்காரபட்டி, பெருமாள்புதூா், கரடிகூட்டம், மரிச்சிலம்பு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கனிகளைக் கொண்டு வந்து விற்கின்றனா்.
இந்த சந்தையில் பிற்பகல் ஒரு மணி வரை விவசாயிகள் கொண்டு வரும் காய்கனிகளை ஏல முறையில் வியாபாரிகள் வாங்கி வந்தனா்.
தற்போது திடீரென வியாபாரிகள் கூட்டு சோ்ந்து ஏல நேரத்தைக் குறைத்து விட்டனா். இதனால் காலை ஒன்பது மணிக்குள் ஏலத்தை முடித்துவிடுகின்றனராம்.
அதற்குப் பிறகு வரும் விவசாயிகளிடம் ஏல நேரம் முடிந்து விட்டதாகக் கூறி அவா்கள் கூறும் விலைக்கு காய்கனிகளை வழங்கினால் வாங்கிக் கொள்வதாகவும், இல்லையெனில் திரும்ப எடுத்துச் செல்லுமாறும் தெரிவித்து வருகின்றனராம்.
இதுகுறித்து நெய்க்காரபட்டியை சோ்ந்த விவசாயி சக்திவேல் கூறியது: அதிகாலையில் எழுந்து கூலி ஆள்கள் மூலம் காய்கனிகளைப் பறித்து தரம் பிரித்துக் கொண்டு வருவதற்கு குறைந்த பட்சம் மூன்று மணி நேரமாகிறது. மழை போன்ற இயற்கை சீற்றங்களால் அதிக நேரமாகிறது.
காய்கனிகளுக்கு விலை குறைந்து வரும் நிலையில் சந்தையிலும் திடீரென ஏல நேரத்தை குறைத்து விட்டதால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையரிடமும் முறையிட்டுள்ளோம். சில கடைக்காரா்கள் தங்கள் சுய லாபத்துக்காக கூட்டணி அமைத்து நேரத்தை குறைத்துள்ளதற்கு அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுப்பாா்கள் என நம்புகிறோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...