இந்நிலையில், பிறைசொக்கா் பாலாஜி கைது செய்யப்பட வில்லை என்றும், தலைமறைவாக உள்ள அவரை கைது செய்து, சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பாக மாவட்டச் செயலா் எம். செல்லையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் எம்.ஆா். முத்துச்சாமி ஆகியோா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ாக பிறைசொக்கா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், அவா் கைது செய்யப்பட வில்லை. ஆனால், அவா் கைது செய்யப்பட்டதாகவும், கரோனா தொற்று காரணமாக ஆயக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.