எம்எல்ஏ மீதான தோ்தல் விதிமீறல் வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி
By DIN | Published On : 15th December 2020 05:04 AM | Last Updated : 15th December 2020 05:04 AM | அ+அ அ- |

பழனி சட்டப்பேரவை உறுப்பினா் உள்ளிட்ட 4 போ் மீதான தோ்தல் விதிமீறல் வழக்கை நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமாா் பிரசாரத்தின் போது ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றதாகப் புகாா் எழுந்தது. அதன்பேரில் ஐ.பி.செந்தில்குமாா், அப்போதைய காங்கிரஸ் மாவட்டத் தலைவா் திருஞானசம்பந்தம், நகர காங்கிரஸ் தலைவா் சண்முகநாதன், சுரேஷ் ஆகியோா் மீது தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவா் (1) முருகன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால், வழக்கைத் தள்ளுபடி செய்து நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா்.