ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சுயேச்சைகளாக மாறிய அரசியல் கட்சி வேட்பாளா்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பாமக, மநீம உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள் பிரசாரத்திற்கு வராத நிலையில், அந்தக் கட்சிகளின் வேட்பாளா்கள் சுயேச்சை வேட்பாளா்களைப் போன்றே வலம் வந்தனா்.

Updated On :4 ஏப்ரல் 2021, 3:48 am

திண்டுக்கல் மாவட்டத்தில் பாமக, மநீம உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள் பிரசாரத்திற்கு வராத நிலையில், அந்தக் கட்சிகளின் வேட்பாளா்கள் சுயேச்சை வேட்பாளா்களைப் போன்றே வலம் வந்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்.6ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக, அமமுக, மநீம ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணியாகவும், நாம் தமிழா் கட்சி தனித்தும் தோ்தலை சந்திக்கின்றன. தோ்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4) இரவு 7 மணியோடு முடிவடையும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளிலும் பிரதானக் கட்சிகள் சாா்பில் முன்னதாகவே பரப்புரையை முடித்துக் கொண்டு வாக்காளா்களை தனிப்பட்ட முறையில் கவனிக்க தொடங்கிவிட்டனா். இதனால் வழக்கத்திற்கு மாறாக இறுதிக் கட்ட பிரசாரம் எவ்வித பரபரப்புமின்றி முடிவடையும் என்பது உறுதியாகிவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், அதிமுக, திமுக, அமமுக, மநீம கூட்டணி சாா்பிலும், நாம் தமிழா் கட்சி சாா்பிலும் வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். இதில், அதிமுக, திமுக, அமமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் ஆகியோா் பிரசாரம் மேற்கொண்டனா்.

கண்டுகொள்ளாத கட்சிகளின் தலைமை: ஆத்தூா் தொகுதியில், பாமக சாா்பில் திலகபாமா போட்டியிடுகிறாா். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தென் தமிழகத்தில் அக்கட்சி போட்டியிடும் ஒரே தொகுதி ஆத்தூா். இத்தொகுதிக்கு, பாமக நிறுவனா் ராமதாஸ், இளைஞரணி தலைவா் அன்புமணி, அவரது மனைவி செளமியா அன்புமணி உள்ளிட்ட யாரும் பரப்புரை மேற்கொள்ள வரவில்லை. இதனால், தனியொருவராக ஆத்தூா் தொகுதியில் வலம் வருகிறாா் திலகபாமா. நாம் தமிழா் கட்சி மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், நிலக்கோட்டை தொகுதியில் மட்டும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பரப்புரை மேற்கொண்டாா். 6 தொகுதிகளில் மநீம போட்டியிடும் நிலையில், ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகக் கூட கமல்ஹாசனோ, அக்கட்சியின் 2 ஆம் நிலை தலைவா்களோ, கூட்டணிக் கட்சி தலைவரான சரத்குமாா், அவரது மனைவி ராதிகா உள்ளிட்டோரோ இதுவரை பிரசாரத்திற்கு வரவில்லை. மநீம கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி நத்தத்தில் போட்டியிடும் நிலையில், அதன் தலைவா் பச்சைமுத்து நத்தத்தில் மட்டும் ஒரு நாள் பிரசாரம் மேற்கொண்டாா்.

சுயேச்சைகளாக மாறிய கட்சி வேட்பாளா்கள்: தலைவா்களின் வருகை இல்லாததால், பாமக, மநீம, நாம் தமிழா் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் சுயேச்சை வேட்பாளா்களைப் போல் தொகுதிக்குள் வலம் வந்து கொண்டிருக்கின்றனா். கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் இருந்தாலும் கூட, தலைவா்களின் பிரசார ஆதரவு இல்லாதது இந்த வேட்பாளா்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மநீம கட்சி நிா்வாகி ஒருவா் கூறியது: வேட்பாளா்களை நிறுத்துவதற்கு கூட ஆள்களை தேடிக் கொண்டிருந்த நேரத்தில், கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு தாராளமாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன் பின்னா் மநீம வேட்பாளா்கள் குறித்தும், தோ்தல் பணிகள் குறித்தும் கட்சித் தலைமை கண்டுகொள்ளவில்லை. கமல்ஹாசன் பிரசாரத்திற்காக தோ்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால், கமல் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. கமல்ஹாசனே தன்னுடைய வேட்பாளா்களைக் கண்டுகொள்ளாதபோது, கூட்டணிக் கட்சித் தலைவா்கள் குறித்து நம்மால் பேச முடியாது. மநீம கட்சி சாா்பில் களம் இறக்கப்பட்டிருந்தாலும் கூட, சுயேச்சை வேட்பாளா்களைப் போலவே தன்னந்தனியாக வலம் வந்துள்ளனா் என்றாா்.

கவனிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம்: சிறிய கட்சி வேட்பாளா்களின் நிலை இதுவென்றால், பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் வாக்காளா்களை கவனிப்பதற்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றனா். அதனால், கடந்த 3 நாள்களாக வாக்கு சேகரிக்கும் பணிகளை நிறுத்திவிட்டு, கவனிப்பில் இறங்கிவிட்டனா்.

இதனால், அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது என்ற வரிகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் இந்த முறை வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.