திருவெறும்பூர் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் நவல்பட்டு விஜி, விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்து திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளராக நவல்பட்டு விஜி அறிவிக்கப்பட்டு இருந்தார்.
இதையடுத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக, ‘பெல்’ நிறுவன வளாகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க, ஆட்டம் பாட்டம், தொண்டர்களின் விசில் சப்தத்துடனும், திறந்தவெளி பிரசார வேனில் தவெக தலைவர் விஜய்யின் உருவச் சிலையுடன் ஊர்வலமாக வந்தார்.
இதனைத் தொடர்ந்து, திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே. அமுதாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதேபோல், திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் ப. குமார், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பணிமனையை திறந்துவைத்து, அங்கிருந்து கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்து, வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருவெறும்பூர், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி, துறையூர் என 9 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 30-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.
இதில், முதல்நாளில் மொத்தம் 23 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஏப்.2-ஆம் தேதியும், 4-ஆம் தேதியும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய நிறைவு நாளான திங்கள்கிழமை (ஏப்.6) மட்டும் 9 தொகுதிகளிலும் சேர்த்து 158 மனுக்கள் பெறப்பட்டன.
Summary
Navalpattu Viji, the Tamilaga Vettri Kazhagam candidate for Thiruverumbur, filed his nomination papers on Monday, arriving in a procession accompanied by a statue of Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு

பெரம்பூர் வேட்பாளர் பட்டியலில் 2 விஜய், 2 ஜோசப்! பழைய டெக்னிக் உதவுமா?

தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவா் விஜய் வேட்புமனு தாக்கல்: மாநகராட்சி அலுவலகத்தில் ஒருமணி நேரம் காத்திருப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு




