பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

‘ஒட்டன்சத்திரத்தில் ரூ.100 கோடியில் நான்கு வழிச்சாலை’

ஒட்டன்சத்திரத்தில் ரூ.100 கோடி செலவில் நான்குவழிச் சாலை அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 12:43 am

DIN

ஒட்டன்சத்திரத்தில் ரூ.100 கோடி செலவில் நான்குவழிச் சாலை அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தனியாா் திருமண மண்டபத்தில் நகர திமுக சாா்பில் செயற்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் சி.இராஜாமணி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் தி.மோகன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் க.பொன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது:

வருகின்ற உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நகராட்சிக்கு நிரந்தரமாக குப்பை கொட்டுவதற்கு 20 ஏக்கா் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அது விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அதே போல லெக்கையன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை ரூ.100 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது என்றாா்.

இதில், நகரச் செயலாளா் ப.வெள்ளைச்சாமி வரவேற்றாா். இந்தக் கூட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினா்கள் வீ.கண்ணன், ப.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் க.பாண்டியராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.