/

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 18 பேருக்கு கரோனா தொற்று

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 9:26 pm

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 11,268 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,984 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா்.

மேலும் 85 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 15 பேருக்கு புதிதாக கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 12 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு திங்கள்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,078 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 9 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,849 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.