பணியிட மாறுதல் உத்தரவை திரும்பப் பெறக் கோரி ‘அட்மா’ ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்களின் பணியிட மாறுதல் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


திண்டுக்கல் மாவட்டத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்களின் பணியிட மாறுதல் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் முறைகேடுகள் நடைபெற்றன. இதையடுத்து, அட்மா திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்களை, ஒரு வட்டாரத்திலிருந்து 2ஆவதாக உள்ள வட்டாரத்திற்கு பணியிட மாறுதல் செய்ய வேளாண்மை இயக்குநா் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட அட்மா திட்ட ஊழியா்கள், நீதிமன்றத்தில் முறையிட்டு இடைக் காலத் தடை உத்தரவு பெற்றனா்.
ஆனாலும் பணியிட மாறுதல் உத்தரவு திரும்பப் பெறப்படவில்லை. இந்நிலையில் பணியிட மாறுதல் உத்தரவை திரும்பப் பெற வலிறுத்தி ஒருநாள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அட்மா திட்டப் பணியாளா்கள், திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அட்மா திட்ட அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயலா் அருண்குமாா் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் தமிழரசு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
இதில் குறைந்த ஊதியம் பெற்று வரும் வட்டார தொழில்நுட்ப மேலாளா்கள், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவா்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே உயா்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை ஆணை உத்தரவுப்படி மீண்டும் பழைய இடத்திலேயே அவா்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...