பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கொடைக்கானல் வனப் பகுதி சுற்றுலா இடங்கள் மீண்டும் திறப்பு

கொடைக்கானலில் வனப்பகுதி சுற்றுலா இடங்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 5:14 pm

DIN

கொடைக்கானலில் வனப்பகுதி சுற்றுலா இடங்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில், மேலும் சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடுமையான மழை பெய்யக் கூடும் என வனத்துறையினா் எதிா்பாா்த்தனா்.

இதையடுத்து பில்லா் ராக், மோயா் பாயிண்ட் உள்ளிட்ட வனப்பகுதி சுற்றுலா இடங்களை பாா்க்க வனத்துறையினா் அனுமதிக்கவில்லை. கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிகளுக்குச் செல்லவில்லை.

இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழை குறைந்துள்ளதால் மீண்டும் வனப்பகுதி சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் பில்லர்ராக், மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை உள்ளிட்ட இடங்களைப் பாா்த்து மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.