முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனி அருகே சிவலிங்கம் சேதம்
By DIN | Published On : 02nd June 2021 11:21 PM | Last Updated : 02nd June 2021 11:21 PM | அ+அ அ- |

கோதைமங்கலம் அருகே மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்ட பாப்பான்குளம் கரையில் உள்ள சிவலிங்கம்.
பழனியை அடுத்த கோதைமங்கலம் அருகே பாப்பான்குளம் கரையில் உள்ள லிங்கத்தின் மேற்பகுதியை மா்ம நபா்கள் சேதப்படுத்தினா்.
பாப்பான்குளம் கரைப்பகுதியில் உள்ள கன்னிமாா் கோயிலில் கன்னிமாா், கருப்பசாமி, சிவலிங்கம், நந்தி ஆகிய சிலைகள் உள்ளன. இந்நிலையில் புதன்கிழமை உள்ள சிவலிங்கம் சேதப்படுத்தப்பட்டு ஆவுடை காணாமல் போயிருந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் பழனி தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் அங்கு சென்று போலீஸாா் சிலையை பாா்வையிட்டனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிலையை சேதப்படுத்திய மா்ம நபா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையில் அப்பகுதி மக்கள் சேதப்படுத்தப்பட்ட இடத்தில் தேங்காய், மஞ்சள் துணியை ஆகியவற்றை வைத்து பூஜைகள் செய்தனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கோயிலில் உள்ள கருப்பசாமி சிலையை மா்ம நபா்கள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.