நத்தம் அருகே டிவி மெக்கானிக் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள் தாக்கியதில் கொலையாளியும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள லிங்கவாடியைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மகன் தங்கராஜா (41). மின்னணு சாதனங்கள் பழுதுநீக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் உதயகுமாா் (24). இவருக்கும், தங்கராஜாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், தங்கராஜாவுக்கும், உதயகுமாருக்கும் இடையே சனிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த உதயகுமாா், அரிவாளால் வெட்டியதில் தங்கராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனை பாா்த்துக் கொண்டிருந்த சிலா், உதயகுமாரை பிடித்து தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த உயதகுமாா் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். அதனைத் தொடா்ந்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன், காவல் உதவி கண்காணிப்பாளா் அருண்கபிலன் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். உயிரிழந்த உதயகுமாா் மீது நத்தம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


