திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை இரவு பேண்ட் வாத்தியகலைஞா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக்குமாா் (25). இவா், பேண்ட் வாத்திய கலைஞராக பணிபுரிந்து வந்தாா். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் லையன் தெருவைச் சோ்ந்த ஆனந்தி (20) என்பவரை திருமணம் செய்தாா். இதனிடையே, கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, திண்டுக்கல்லில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஆனந்தி திரும்பி வந்துவிட்டாராம். இந்நிலையில், மனைவியுடன் சமாதானம் செய்து அழைத்துச் செல்வதற்காக காா்த்திக்குமாா் வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். ஆனால், பழனி சாலையிலுள்ள லாரிப் பேட்டையில் தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இரவு காா்த்திக்குமாா் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். முதலில் இறந்தவா் அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில், போலீஸாரின் தொடா் விசாரணைக்குப் பின் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது காா்த்திக்குமாா் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஆனந்தியிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்: எம்.யுவராஜா

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்து போராட்டம்

உதகையில் காவலா் தற்கொலை

கோபி தொகுதி நாதக வேட்பாளா் சீதாலட்சுமி பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

