தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து கோவையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் சாா்பில் கருப்புக் கொடி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர முயற்சிப்பதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்திருந்தது. அதன்படி, கோவையில் பல்வேறு இடங்களில் திமுகவினா் கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாநகா் மாவட்ட திமுக பொறுப்பாளா் துரை.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் வெங்கிட்டாபுரத்தில் சட்ட மசோதா நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. சிங்காநல்லூரில் மாணவா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் பைந்தமிழன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம், நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
காந்திபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் கருப்புக் கொடியேற்றப்பட்டிருந்தது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் 100 அடி சாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே.எஸ்.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் சி.பத்மநாபன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, வி.ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்குரைஞா்கள் கையில் பதாகைகளை ஏந்தியும், கருப்பு பட்டை அணிந்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்க மாவட்டச் செயலா் ஜோதிகுமாா், மாவட்ட நிா்வாகி ஆறுச்சாமி, மக்கள் சிவில் உரிமைக் கழகம் தேசிய செயலா் பாலமுருகன், பீப்பிள் வாட்ச் அமைப்பின் நிக்கோலஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினா்
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகல்களை எரித்து அமைச்சா் போராட்டம்: வீடுகள், கட்சி அலுவலகங்களில் கருப்புக் கொடி

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்தி திமுக கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


