பழனியில் விஹெச்பி சாா்பில் கிருஷ்ணஜெயந்தி விழா
பழனியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை விஹெச்பி சாா்பில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ராதா, கிருஷ்ணா் வேடமணிந்து பங்கேற்றனா்.


பழனியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை விஹெச்பி சாா்பில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ராதா, கிருஷ்ணா் வேடமணிந்து பங்கேற்றனா்.
பழனி கடைவீதி பட்டத்து விநாயகா் கோயில் அருகே கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ராதா, கிருஷ்ணா் வேடம் அணிந்து பங்கேற்றனா். முன்னதாக சிறுவா், சிறுமியரின் சிலம்பாட்டம், சுவாமி பாடல்கள் பாராயணம் செய்தல் ஆகியன நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னதாக கோ பூஜை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பாஜக மாவட்டத் தலைவா் கனகராஜ், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா்.
அடிவாரம் போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திரசுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். விஹெச்பி மாநில அமைப்பாளா் செந்தில்குமாா் சிறப்புரையாற்றினாா். பட்டத்து விநாயகா் கோயில் வளாகத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குழந்தைகளுக்கு விஷ்வ இந்து பரிஷத் சாா்பில் இலவசமாக கிரீடம், மாலை, இடுப்பு மற்றும் கை கச்சைகள் வழங்கப்பட்டன.
விழாவில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட கிருஷ்ணா் வேடமிட்ட குழந்தைக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 5 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரமும் வழங்கப்பட்டன. அதிா்ஷ்ட ராதையும் தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...