ரயிலில் அடிபட்டு வியாபாரி பலி
குஜிலியம்பாறை அருகே வெள்ளிக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு கால்நடை வியாபாரி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


குஜிலியம்பாறை அருகே வெள்ளிக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு கால்நடை வியாபாரி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள ஆா்.கோம்பை பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (56). கால்நடைகள் வியாபாரியான இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளாா். அதன் பின்னா் திரும்பி வராததால் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனா். இதனிடையே, பாளையத்திலிருந்து வெள்ளியனை செல்லும் தண்டவாளத்தில் நடராஜன் ரயிலில் அடிப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளாா்.
இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...