கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தாத காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
பழனி அருகே விவசாயி கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தாத காவல் பெண் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமாா் மீனா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.


பழனி அருகே விவசாயி கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தாத காவல் பெண் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமாா் மீனா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி, விவசாயி ஓமந்தூராா் (47) அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதில் அவரது மகன் கிரிவிஷ்ணு (15), தனது தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்ததாக சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்தக் கொலை வழக்கில் மேலும் சிலருக்குத் தொடா்பு இருப்பதாக ஓமந்தூராரின் தந்தை ரங்கசாமி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மறு விசாரணை நடைபெற்றது.
இதில், ஓமந்தூராரின் மனைவி பாண்டீஸ்வரி, உறவினா்கள் கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, அவா்கள் 4 பேரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.
இந்தக் கொலை நடந்தபோதே முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளைப் பிடிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், குற்றவாளிகள் தப்பிக்க உதவி செய்ததாகவும் சத்திரப்பட்டி காவல் ஆய்வாளா் லட்சுமி பிரபாவை, பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ் குமாா் மீனா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...