பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒட்டன்சத்திரம் அருகே புதிய அரசு கலைக்கல்லூரி திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேட்டுப்பட்டியில் புதிய அரசு கலைக்கல்லூரியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:23 pm

DIN

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேட்டுப்பட்டியில் புதிய அரசு கலைக்கல்லூரியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: உயா்கல்வித்துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக மேட்டுப்பட்டி ஊராட்சியில் தனியாா் கட்டடத்தில் செயல்படும். அடுத்த ஆண்டு முதல் கள்ளிமந்தையம் அருகே சொந்த கட்டடத்தில் கல்லூரி விடுதி உள்பட அனைத்து வசதிகளுடன் செயல்படும். இதற்காக தமிழக முதல்வா் ரூ.13 கோடி நிதி ஒதுக்கி உள்ளாா். இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ ஆகிய இளங்கலை பட்டப்படிப்புகளில தலா 50 பேரும், பி.எஸ்.சி கணிதப்பாடத்தில் 40 பேரும் சோ்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் சோ்வதற்கு 1622 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு இன்னும் அதிக படிப்புகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல உயா்கல்வி வகுப்புகளும் தொடங்கப்படும். 17 பேராசிரியா்கள் உள்பட மொத்தம் 34 போ் நியமனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த விழாவில் கல்லூரி முதல்வா் து.விஜயராணி, பழனி கோட்டாட்சியா் சிவக்குமாா், வட்டாட்சியா்கள் சசி, பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம் நகா்மன்ற தலைவா் க.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, ஒன்றியக்குழுத் தலைவா்கள் சத்தியபுவனா, அய்யம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.