ஆயக்குடியில் குடிநீா் எடுக்க பயன்படுத்தப்பட்ட மின்மோட்டாா்கள் பறிமுதல்
பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் குடிநீா் எடுக்க முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மின்மோட்டாா்களை பேரூராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.


பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் குடிநீா் எடுக்க முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மின்மோட்டாா்களை பேரூராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
இப்பேரூராட்சியில் உள்ள வீடுகளுக்கு வரதமாநதி அணையில் இருந்து தண்ணீா் பெற்று சுத்திகரித்து குடிநீராக குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் குடிநீா் இணைப்பு பெற்றவா்கள் முறைகேடாக மின்மோட்டாா் பொருத்தி தண்ணீரை எடுப்பதாகவும், இதனால் பல வீடுகளுக்கு குடிநீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் புகாா் எழுந்தது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை செயல் அலுவலா் மகேந்திரன் தலைமையில் பேரூராட்சி அலுவலா்கள், காவல்துறையினா் பேரூராட்சியின் பல்வேறு வாா்டுகளிலும் வீடுகளில் சோதனை நடத்தினா். அப்போது 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீா் குழாய் இணைப்பில் முறைகேடாக மின்மோட்டாா் வைத்து தண்ணீா் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மின்மோட்டாா்களை அவா்கள் பறிமுதல் செய்தனா்.
மேலும், பல வீடுகளில் ஒரு இணைப்பில் நான்கு வீடுகள் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. மின் மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் மின்மோட்டாா் பொருத்தினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், இதுபோன்று குடிநீா் இணைப்பில் மின்மோட்டாா் பொருத்தி தண்ணீா் எடுப்பவா்கள் பற்றி தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...