மேற்குவங்கத்தில் முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்கு அனுமதி தேவையில்லை, ஆனால், இந்துக்கள் பூஜைகள் செய்வதற்கு நீதிமன்ற அனுமதி கேட்க வேண்டியிருக்கிறது என பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் கூறியுள்ளார்.
கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான தட்சிணேஸ்வரர் கோயிலில் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் இன்று சாமி தரிசனம் செய்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"மேற்கு வங்கத்தில் மத நடவடிக்கைகளுக்கான அனுமதி விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு நிலவுகிறது. இங்கு முஸ்லிம்கள், தொழுகையை சுதந்திரமாக நடத்த முடிகிறது. அவர்களுக்கு அனுமதி இருக்கிறது. ஆனால் இந்துக்கள், பூஜைகள் நடத்தவோ அல்லது பந்தல்கள் அமைக்கவோ நீதிமன்ற அனுமதி தேவை. இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமானது. மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என காளியிடம் வேண்டினேன்" என்று கூறினார்.
நிதின் நவீன் 2 நாள் பயணமாக மேற்குவங்கத்தில் பிரசாரம் மேற்கொள்ளும்பொருட்டு கொல்கத்தா வந்துள்ளார்.
இதனிடையே, 'முஸ்லிம் வாக்குகளைக் கைப்பற்றிய திரிணமூல் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதுவும் செய்யவில்லை' என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டினார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களுடன் பேசிய ஓவைசி, வங்க மக்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்று வழியை வழங்குவதற்காகத் தனது கட்சி, ஹுமாயூன் கபீரின் ஏ.ஜே.யு.பி. கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் கூறினார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Summary
Permission is given for offering namaz; But hindus get permission for pujas: BJP Chief Nitin Nabin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

மே.வங்கத்தில் இஸ்லாம்பூர் உள்ளிட்ட இடங்களின் பெயர்கள் மாற்றப்படும்! - நிதின் நவீன் வாக்குறுதி!
கவர்ச்சி மக்களைத் திரட்ட மட்டுமே உதவும்! விஜய் குறித்து பாஜக தேசிய தலைவர்!

ஏப். 5, 6ல் தமிழகம் வரும் நிதின் நவீன், அமித் ஷா!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


