தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும்பொருட்டு பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் பாஜக தலைவர்கள் பலரும் தமிழகத்திற்கு வந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
ஏப். 5 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனும் ஏப். 6 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே பிரதமர் மோடி நாளை சென்னை வந்து பின்னர் புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். பாஜக தலைவர்கள் தமிழகம் வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
BJP leaders Nitin nabin, Amit Shah to visit Tamil Nadu on April 5 and 6
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









