நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை மத்திய அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் சோனம் வாங்சுக் நடத்தி வந்த போராட்டம் பெரும் கவனம் பெற்று மாபெரும் போராட்டமாக உருவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் இன்று (ஜூலை 23) போராட்டம் நடத்தின.
மேலும், நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் தனித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். தில்லியில் நடைபெறும் சிஜேபி இளைஞர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் போராட்டங்களுக்கு இடையே நடைபெற்ற இந்தச் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு பற்றி மக்களவையில் விவாதம் நடத்துவதற்கான நேரமும் தேதியும் ஒதுக்குவதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் தன்னைச் சந்திக்குமாறு ஓம் பிர்லா அறிவுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி எம்பி அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ஆகியோர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Amidst protests by opposition parties in Parliament, Union Minister Amit Shah met Lok Sabha Speaker Om Birla in person.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!
போராட்டம் தீவிரம்: அமித் ஷாவுடன் சந்திப்பு! ராஜிநாமா செய்கிறாரா தர்மேந்திர பிரதான்?

மாற்றப்படுகிறாரா தமிழக ஆளுநர் ஆர்லேகர்? அமித் ஷாவுடன் தில்லியில் திடீர் சந்திப்பு







