இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பொறுப்பேற்க வேண்டும்... நீட் போராட்டத்துக்கு இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆதரவு!

இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான நிஹல் சரின் பதிவு குறித்து...

News image

இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் நிஹல் சரின் - படம்: எக்ஸ் / நிஹல் சரின்.

Updated On :23 ஜூலை 2026, 3:39 pm IST

இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான நிஹல் சரின் (22 வயது) தனது எக்ஸ் பக்கத்தில், “நீட் தேர்வு குளறுபடிகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) தில்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரம் இருந்தார். பின்னர், வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்று ஆதரவு அளித்து வருகிறார்கள்.

கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல மாணவர்கள் முயற்சித்தபோது, தில்லி காவல்துறையினர் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி எறிந்தனர்.

இந்திய கிராண்ட்மாஸ்டர் நிஹல் சரின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இந்தியாவை கௌரமாக பிரதிநிதித்துவம் செய்யும் இளம் இந்தியராகிய நான் தற்போது வலியில் இருக்கிறேன்.

இளைஞர்கள் கடினமான தேர்வுக்கு எழுத செல்லும்போது அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பது அற்பமானது அல்ல. இதற்கு தீர்வு காணாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல எனக் கூறியுள்ளார்.

விளையாட்டு வீரர்களில் இதுவரை மனு பாக்கர், யுவராஜ் சிங், அபினவ் பிந்த்ரா வரிசையில் நிஹல் சரின் தங்களது ஆதரவை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இதுவரை எதுவும் கூறாததும் குறிப்பிடத்தக்கது.

Summary

Indian Grandmaster Nihal Sarin says We must be accountable

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.