இந்தியர்கள் ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீப காலமாக ஈரானில் மோதல் அதிகரித்துள்ள காரணத்தால் இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தூதரகம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,
1) எந்த நோக்கத்திற்காகவும் ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள், அங்கு பாதுகாப்பான சூழல் மேம்படும்வரை பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்.
2) ஈரானில் உள்ள இந்தியர்கள் கிடைக்கக்கூடிய விமான சேவைகளைப் பயன்படுத்தி, தற்காலிகமாக ஈரானை விட்டு வெளியேறுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
3) ஈரானில் தங்கியிருக்க விரும்பும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அங்கு நிலவும் சூழல் குறித்து விழிப்புணர்வாக இருக்க செய்திகளைக் கவனமாகப் பார்க்கவேண்டும். ஈரானில் ராணுவ நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும் தெற்கு கடற்கரைப் பகுதிகள் போன்ற இடங்களைத் தவிர்க்கவேண்டும். அங்குள்ள உள்ளூர் அதிகரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.
4) ஈரானில் உள்ள இந்தியர்கள் எவரேனும் இந்தியத் தூதரகத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்யாமல் இருந்தால் உடனடியாகப் பதிவு செய்யவும். அதேபோல, கூடுதல் தகவல்களுக்குத் தொடர்ந்து தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களைக் கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
பதிவில் குறிப்பிடப்பட்ட ஈரானிலுள்ள இந்தியத் தூதரகத்தின் அவசர உதவி எண்கள்:
+989128109115;
+989128109109;
+989128109102;
+989932179359
Summary
The Indian Embassy has issued a warning for Indians to leave Iran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்
வியத்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் பலி!

ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார்! - டிரம்ப் எச்சரிக்கை






