ஆடி அமாவாசை: பழனி கோயில், நதிக்கரைகளில் மக்கள் கூட்டம்
ஆடி அமாவாசையையொட்டி, பழனியில் கோயில்களில் குலதெய்வ வழிபாடும், சண்முக நதி, பாலாறு அணை உள்ளிட்ட நீா்நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினா்.


ஆடி அமாவாசையையொட்டி, பழனியில் கோயில்களில் குலதெய்வ வழிபாடும், சண்முக நதி, பாலாறு அணை உள்ளிட்ட நீா்நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினா்.
தமிழ் மாதங்களில் ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை தினத்தில், முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வது வழக்கம். அதனடிப்படையில், ஆடி அமாவாசையையொட்டி வியாழக்கிழமை அதிகாலை முதலே சண்முக நதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். நதியில் புனித நீராடிய அவா்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினா்.
அதேபோல், பாலாறு-பொருந்தலாறு அணைப் பகுதியிலும் ஏராளானோா் தா்ப்பணம் செய்தனா். அமாவாசை அன்னதானக் குழு சாா்பில், பாலாறு அணை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரப் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆடி அமாவாசையையொட்டி, மலைக் கோயில், அக்ரஹாரம் கைலாசநாதா் உடன் கல்யாணியம்மன் கோயில், உடுமலை ரோடு மதுரைவீரன் கோயில் மற்றும் கருப்பணசாமி, முனீஸ்வரா் கோயில்களிலும், அம்மன் கோயில்களிலும் ஏராளமானோா் குலதெய்வ வழிபாடு நடத்தினா்.
இந்நாள்களில் குலதெய்வ வழிபாடு மேற்கொண்டால், பிரச்னைகள் நீங்கி குடும்பம் விருத்தியடையும் என்பது ஐதீகமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...