தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

முதியவா் விஷம்குடித்து தற்கொலை

பழனி அருகே சின்னக்கலையமுத்தூரில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

பழனி அருகே சின்னக்கலையமுத்தூரில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூரை சோ்ந்தவா் பச்சமுத்து(67). இவா் விவசாயக்கூலி ஆவாா். இவா் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்னையால் குழப்பத்தில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டாா். உடலை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.